செய்திகள்

மதுரை மாவட்டத்தில் விபத்துகள் 40 சதவீதம் குறைந்துள்ளன- போலீஸ் டி.ஐ.ஜி.

Published On 2018-07-26 17:01 IST   |   Update On 2018-07-26 17:01:00 IST
40 சதவீதம் விபத்துகள் மதுரையில் குறைந்துள்ளதாக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் யாதவ் தெரிவித்தார்.
மதுரை:

58-வது காவலர் மாநில சுடர், இன்று மதுரை ஆயுதப்படை மைதானம் வந்தது.

மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் யாதவ் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மேற்கு மண்டலத்தில் இருந்து புறப்பட்ட விளையாட்டுப் போட்டியில் தென் மண்டல அளவில் இருந்து 145 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மதுரை-விருதுநகர் மாவட்டங்களில் சாலை போக்குவரத்து தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கைகள் விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 40 சதவீத விபத்துகள் இந்த ஆண்டு குறைந்துள்ளன. தென் மாவட்டங்களில் விபத்து பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதோடு மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினோம்.

மதுரை மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமலும், வாகன உரிமம் இல்லாமலும் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெரிவித்தோம்.

இதன் அடிப்படையில் 65 சதவீதம் பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், மேலூர் அருகே தொழில் அதிபர் ஜோசப் மேத்யூவை கடத்தியவர்கள், அவரிடம் ரூ. 2 கோடி பறிக்க திட்டமிட்டுள்ளனர். ரூ.30 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட ஜோசப் மேத்யூவை கடத்தல்காரர்கள் இறக்கி விட்டு பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

அவரது உதவியாளர் மத்யூவை பணயக்கைதியாக வைத்துள்ளனர். இந்த சூழலில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கடத்தல்காரர்களின் செல்போன் உரையாடல்களை கண்டுபிடித்தனர்.

இது தெரிந்ததும் மத்யூவையும் விட்டு விட்டு கடத்தல் கும்பல் தலைமறைவாகி விட்டது. அவர்களை பிடிக்க 3 தனிப்பகைள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார். #tamilnews
Tags:    

Similar News