செய்திகள்

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவன மேலாளர் மாயம்

Published On 2018-06-07 19:48 IST   |   Update On 2018-06-07 19:48:00 IST
கடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி அரியமங்கலம் ராஜப்பாநகரை சேர்ந்தவர் அப்துல்ரசீத். இவரது மகன் பிலாதீன் (33). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. 

இந் நிலையில் கடந்த 28-ந் தேதி வெளியே சென்ற பிலாதீன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பிலாதீன் கிடைக்க வில்லை. 

இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடன் பிரச்சினையில் பிலாதீனை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News