செய்திகள்
சுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார்- வைகோ
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார் என்று மதுரை விமான நிலையத்தில் வைகோ கூறினார். #MDMK #Vaiko #BJP #SubramanianSwamy
மதுரை:
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா? நக்சலைட்டுகளா? விடுதலைப்புலிகளா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து இன்று மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கும் போது சுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார்.
யார் மீதும் எளிதாக பழி போடுவார். மனதில் தோன்றியதை யோசிக்காமல் அப்படியே கூறுவார். அவர் கூறும் கருத்துக்களை கவனத்தில் ஏற்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #BJP #SubramanianSwamy
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா? நக்சலைட்டுகளா? விடுதலைப்புலிகளா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் கூடங்குளம் முதல் அனைத்து போராட்டத்தின் பின்புலத்திலும் தீவிரவாதிகள் இருந்துள்ளனர் என்றார்.