செய்திகள்

மதுரை அருகே கணவன்-மனைவியை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு

Published On 2018-05-29 14:53 IST   |   Update On 2018-05-29 14:53:00 IST
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவியை தாக்கி 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை:

மதுரை ஒத்தக்கடையை அடுத்துள்ள இடையபட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் நேற்றிரவு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை மறித்தனர்.

பின்னர் அந்த கும்பல் கணவன், மனைவியை சரமாரியாக தாக்கி சங்கிலி மனைவியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது.

இது குறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஒத்தக்கடை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #Tamilnews
Tags:    

Similar News