செய்திகள்

3 நாட்களுக்கு சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் இலவசம்

Published On 2018-05-25 14:26 GMT   |   Update On 2018-05-25 14:26 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain #Metrofreetravel

சென்னை:

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். #ChennaiMetroTrain #Metrofreetravel
Tags:    

Similar News