செய்திகள்

தாராபுரம் நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி

Published On 2018-05-23 16:49 IST   |   Update On 2018-05-23 16:49:00 IST
தாராபுரத்தில் மொபட் மீது வாகனம் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் உடல் சிதறி பலியானார்.

தாராபுரம்:

தாராபுரம் ஆர்.கே.ஆர். நகரை சேர்ந்தவர் சிதம்பரசாமி (72). நிதி நிறுவன அதிபர். இவர் தாராபுரம் அண்ணா நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் இவர் பணம் வசூலுக்காக தனது மொபட்டில் வெளியூர் புறப்பட்டார். தாராபும்- திருப்பூர் மெயின் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் மொபட் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார். அவரது உடல் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதியது. இதில் அவரது தலை, கை, கால்கள், உடல் நசுங்கியது.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சிதம்பரசாமி உடல் சிதறி கிடப்பதை பார்த்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதம்பரசாமி உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News