செய்திகள்

மதுரை அருகே விபத்து - வாலிபர் பலி

Published On 2018-05-23 16:12 IST   |   Update On 2018-05-23 16:12:00 IST
மதுரை அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை செல்லூர், போஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ் (வயது 21). நேற்று மதுரை ரிங் ரோட்டில் தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமணம் முடிந்ததும் சுரேஷ் அங்கிருந்து வீடு திரும்பினார்.

விரகனூர் ரிங் ரோடு ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுரேஷ் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News