செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை

Published On 2018-05-23 08:02 GMT   |   Update On 2018-05-23 08:02 GMT
தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். #SterliteProtest
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.



தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இன்றும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #SterliteProtest

Tags:    

Similar News