செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாட்சியமை தங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2017-18 மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த தடகளப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் உள்ளிட்ட 4 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட விளையாட்டு முக்கியமாகும். எனவே இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் இன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாற்றுத் திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.