செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே குழந்தையின்மையால் கூலித்தொழிலாளி தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே குழந்தையின்மையால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமம் புத்தர் புதுதெருவை சோர்ந்தவர் பாலுசாமி மகன் பாஸ்கர் (வயது 32). கூலிதொழிலாளி. இவருக்கும் மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இலையூரில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வெகு நாட்களாக பாஸ்கர் மன உளைச்சலில் இருந்துள்ளார். மன ஆறுதலுக்காக கடந்த 15 நாட்களாக பாஸ்கரும் அவரது மனைவி கஸ்தூரியும் சலுப்பையிலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் பாஸ்கர் மட்டும் இலையூர் வந்து வீட்டில் இருந்தவர் மனமுடைந்து விஷமருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
மயங்கி கிடந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்து விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.