உள்ளூர் செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-01-26 09:34 GMT   |   Update On 2023-01-26 09:34 GMT
  • நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மாரி (வயது30), கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (27) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.
  • இசக்கிமாரி, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

நெல்லை:

நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மாரி (வயது30), கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (27) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

இந்நிலையில் பொது மக்களிடையே பீதியையும், பாதுகாப்பற உணர்வையும் ஏற்படுத்தி பொது ஒழுங்கு பரா மரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக இசக்கிமாரி, அஜித்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுப்பு லெட்சுமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

இதனையேற்று இசக்கிமாரி, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News