பண்ருட்டி வங்கி கேஷியர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது
- கொள்ளையடித்த நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொள்ளையர்களை சிறையில் அடைத்தனர்.
- டி.எஸ்.பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த ஒறையூர் கிராமத்தில் வங்கி காசாளர் ஒருவர்வீட்டினுள் புகுந்தகொள்ளையர்கள் நகைகளை கொள்ளை யடித்துக் கொண்டு வீட்டி லிருந்த ரூ10 லட்சம் மதிப்பி லான புத்தம் புதிய காரை திருடிசென்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னைவரைசென்றுசி.சி.டி.வி கேமராக்களை பார்த்து குற்றவாளிகளை கண்டுபிடித்து திருவண்ணா மலை போலீசாருடன் சேர்ந்து குற்றவாளிகளை கைது செய்து கொள்ளை யடித்த நகை, கார் ஆகிய வற்றை பறிமுதல் செய்து கொள்ளையர்களை சிறை யில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தேடப் பட்டு வந்தகள்ளக்குறிச்சி மாவட்டம்கூவாகம் மேற்கு தெரு மாரி என்ற மாரி முத்து (30), விழுப்புரம் மாவட்டம் வானூர் கேணிப்பட்டு மாரி யம்மன் கோவில் தெரு சுந்தரகிருஷ்ணன் (26)ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர்.இவர்களி டம் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.