உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கஞ்சா, மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
- 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை
- மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரும் சிக்கினார்
ஊட்டி,
கூடலூர் போலீசார் சம்பவத்தன்று அத்திபாலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தன்ர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பதும், கஞ்சா விற்க நின்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மசினக்குடி போலீசார் சம்பவத்தன்று கக்கநல்லா சோதனைசாவடி அருகே ஒரு வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 9 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் அவர் பெங்களூரு, ஜே.பி. நகரை சேர்ந்த ராஜேஷ் (44) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. ராஜேசை போலீசார் கைது செய்தனர்.