உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் சூட்டுபொத்தையில் 110-வது குருபூஜை தேர்த்திருவிழா -18-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-11-16 09:13 GMT   |   Update On 2023-11-16 09:13 GMT
  • ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
  • சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.

வள்ளியூர்:

வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.

கிரிவல தேரோட்ட திருவிழா

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி யின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகிறது.

ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞ ர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.

சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். இத்தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்ற னர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

23-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹா மேரு தியான மண்டபத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 26-ந் தேதி மாலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறுகிறது.

27-ந் தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவல மும், அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு குருஜெயந்தி ஆராதனா மற்றும் அபிஷேகம் திரு விளக்கு பூஜையுடன் நடை பெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள்

10 நாட்கள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்து கிருஷ்ணா சித்திரக்கூ டத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News