உள்ளூர் செய்திகள்

அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகளை படத்தில் காணலாம்.

நெல்லை சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் ரூ.3.26 கோடி மதிப்பிலான 1,034 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

Published On 2023-03-27 14:35 IST   |   Update On 2023-03-27 14:35:00 IST
  • நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வழக்குகளில் 1,304 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.
  • விஜயநாராயணம் அருகே உள்ள ஒரு பயோ மெடிக்கல் வேஸ்ட் ஆலையில் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மாவட்டங்கள் தோறும் கஞ்சா விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வழக்குகளில் 1,304 கிலோ பிடிப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3.26 கோடி ஆகும்.

அவை இன்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் முன்னிலையில் விஜயநாராயணம் அருகே உள்ள ஒரு பயோ மெடிக்கல் வேஸ்ட் ஆலையில் தீ வைத்து பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News