செய்திகள்

அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-05-30 09:12 GMT   |   Update On 2018-05-30 09:12 GMT
அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது செம்மலை பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.

இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மாணவர்கள் நலன் கருதி அரசு செயல்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News