லைஃப்ஸ்டைல்

மார்பக புற்றுநோய் வருவதற்கு பரம்பரையும் காரணமா?

Published On 2019-01-11 07:40 GMT   |   Update On 2019-01-11 07:40 GMT
ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.



* மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

* மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

* BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

* வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
Tags:    

Similar News