முட்டையின் வெள்ளை-மஞ்சள் கரு: எது சிறந்தது?
- முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
- முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.
எது சிறந்தது?
சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.