- கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
- மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.
கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.
கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.
கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
* பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.
கமலி ஸ்ரீபால்
இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.
கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
* வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.
* அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.
* அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.
* அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.
* மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.
* பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.
* எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.
கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்
* வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.
* வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.
* கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.
* சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.
* கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.
* ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.
* ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.
* இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.
* பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.
வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?
* மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
* சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
* சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.
* உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.
* முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
* வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
(செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.
* ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.
* நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
* கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
* ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.
கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.
ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.