நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் பன்னீர் நெல்லிக்காய்: நன்மைகள் பல!
- தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
- ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம்.
நெல்லிக்காயில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பன்னீர் நெல்லிக்காய், மினி ஆப்பிள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இது பெல் ஆப்பிள், வேக்ஸ் ஆப்பிள், ஜாவா ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், லவ் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பில்லாந்தேசி குடும்பத்தை சேர்ந்தது. இதன் விதைகள் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
ஊட்டச்சத்து:
இந்த நெல்லிக்காயில் நார்ச்சத்து வைட்டமின்கள் ஏ, பி1, சி, ஈ மற்றும் கனிமங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
நன்மைகள்:
* ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
* கண் பார்வையை மேம்படுத்தும்.
* சளி இருமலை குறைக்கும்.
* முடி வளர்ச்சிக்கு உதவும்.
* கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
பன்னீர் நெல்லிக்காயை தேன் அல்லது பன்னீருடன் கலந்து சாப்பிடலாம். ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம். பன்னீர் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் எடையை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.