லைஃப்ஸ்டைல்

பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்

Published On 2018-05-18 04:41 GMT   |   Update On 2018-05-18 04:41 GMT
கடலை எண்ணெயில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. கர்ப்பிணிகள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது.
பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.



நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

பெண்களுக்கு மார்பகக் கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன. பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் வேர்க்கடலை தடுக்கிறது. 
Tags:    

Similar News