லைஃப்ஸ்டைல்

கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய் சிறந்தது

Published On 2018-11-27 05:07 GMT   |   Update On 2018-11-27 05:09 GMT
தலையில் தினசரி அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும்.
அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும் என்று குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. மாறாக அப்படி செய்வது, முடியை சேதப்படுத்திவிடக் கூடும்.

காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது.

இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால்,

இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.

எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும். 
Tags:    

Similar News