லைஃப்ஸ்டைல்
ரசமலாய் பார்

குழந்தைகளுக்கு விருப்பமான ரசமலாய் பார்

Published On 2021-11-26 09:19 GMT   |   Update On 2021-11-26 09:19 GMT
அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:

வெள்ளை சாக்லெட் - 250 கிராம்
பால் - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 கிராம்
ஏலக்காய் - 1
ரசமலாய் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
பாதாம், பிஸ்தா (பொடித்தது) - சிறிதளவு

செய்முறை:

சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் கலந்து ஊற வைக்கவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதற்குள் வெள்ளை சாக்லெட்டைக் கொட்டி மிதமான தீயில் உருக்கவும். பின்பு அதில் குங்குமப்பூ ஊறவைத்தப்  பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையில் ரசமலாய் எசன்ஸ் ஊற்றி, நன்றாகக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பொடித்து வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் அதன் நிறம் மாறாத வண்ணம் வறுக்கவும். இதை வெள்ளை சாக்லெட் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

பின்பு படத்தில் காட்டியவாறு விருப்பமான சாக்லெட் அச்சில், இந்த சாக்லெட் கலவையை ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 மணி நேரம் குளிர வைத்து எடுக்கவும். இப்பொழுது ருசியான ‘ரசமலாய் பார்' தயார்.

இதையும் படிக்கலாம்...சத்தான சம்பா கோதுமை கஞ்சி
Tags:    

Similar News