லைஃப்ஸ்டைல்

சூப்பரான கருப்பட்டி அல்வா

Published On 2019-02-06 07:44 GMT   |   Update On 2019-02-06 07:44 GMT
அல்வா செய்யும் போது சர்க்கரை, வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இன்று கருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தினை அரிசி - 200 கிராம்,
கருப்பட்டி - 175 கிராம்,
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 30 கிராம்,
பாதாம் - 20 கிராம்,
பிஸ்தா - 20  கிராம்,
நெய் - 100 கிராம்,
தண்ணீர் - 200 மி.லி.,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.



செய்முறை :

தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

ஒரு  வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை  நன்றாகக் கிளறவும்.

பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News