பெண்கள் உலகம்

வைட்டமின் குறைபாடுகள் உணர்த்தும் அறிகுறிகள்

Published On 2019-01-09 08:34 IST   |   Update On 2019-01-09 08:34:00 IST
பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
வைட்டமின்களும், தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமானவை இதன் குறைபாடு பலரிடம் காணப்படுவதன் காரணம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை நாம் இன்னமும் நன்கு பயன்படுத்த முன்வராதது தான் காரணம். பலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாக முறையான உணவு முறையினை பின்பற்ற முடிவதில்லை. மிகச் சாதாரணமாக நாம் காணும் சத்து குறைபாடுகளானது இரும்பு, வைட்டமின் டி, கால்ஷியம் குறைபாடுகள் ஆகும்.

பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். மருத்துவரே உங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

* எப்போதும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு சத்து குறைபாடு போன்றவை இருக்கக்கூடும்.

* ஆடு தசையில் ஏற்படும் இறுக்கப் பிடிப்பு மக்னீசயம் குறைபாட்டினைக் குறிக்கலாம்.

* ஈறுகள் வீக்கம், சிறு காயங்கள் ஆற அதிக நேரம் பிடித்தல் போன்றவை வைட்டமின் ‘சி’ குறைபாடாக இருக்கலாம். அதிக புகை பிடிப்பவர்களுக்கு வைட்டமின் ‘சி’ குறைபாடு அதிகம் காணப்படுகின்றது.

* இரவில் கண் பார்வை குறைதல் (அ) பொதுவாகவே கண் பார்வை குறை போன்றவற்றுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் முக்கிய காரணமாகும்.

* சிலருக்கு கை, முதுகு லக்கங்களில் கூட பருக்கள் இருக்கலாம்.இதற்கு சரும மருத்துவர் மூலம் சிகிச்சை பெற வேண்டும் எனினும் லிவீஸீநீ குறைபாடு இருக்கின்றதா எனவும் மருத்துவர் மூலம் அறிந்து குறைபாட்டினை சரிசெய்து கொள்ள வேண்டும்.

* வாயில் சிறு புண்கள், உடலில் வித்தியாசமான சரும பாதிப்புகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு இருக்கின்றதா என்று அறியவும்.

* நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் சில காரணங்களுடன் முக்கியமான காரணமாக வைட்டமின் ‘பி’ குறைபாடும் இருக்கலாம். இந்த வைட்டமின் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு அவசியம்.

சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கவனிக்க வேண்டும் என்பதற்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* தொடர்ந்து சோர்வாக இருந்தால் உடனடியாக இதற்கு கவனம் செலுத்துங்கள்.

* உங்கள் முயற்சி இல்லாமல் திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவு ஏற்பட்டால் ஏன் என மருத்துவர் மூலம் அறியுங்கள்.

* உடலில் ஏதோ ஒரு பகுதியில் விடாது வலி இருப்பதும், சிகிச்சை பலனின்றி வலிப்பதும் அதிக மருத்துவ கவனம் தேவைப்படுவது ஆகும்.

* உடலில் கட்டி போல் சிறு உருண்டை இருப்பின் உடனடியாக பரிசோதித்து தீர்வு பெறுங்கள்.

* அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் பாதிப்பிற்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவை.

* சருமத்தில் ஏற்படும் திடீர் மச்சம் போன்றவை அல்லது அதில் ஏற்படும் மாறுதல்கள் இருந்தால் அதனை தீர மருத்துவஆய்வு செய்ய வேண்டும்.

* இருமல் பொதுவாக சளி, காய்ச்சல் இவற்றோடு ஏற்படுவதுதான்.

* அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு பின் மலச்சிக்கல் என்ற அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

* இருமலில் ரத்தம், மேலும் பிறப்புறுப்பு, குடல் வெளியேற்றத்தில் ரத்தம் போன்றவற்றுக்கு சிறிதும் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* உணவு, திரவ உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் கவனித்து விட வேண்டும்.
Tags:    

Similar News