லைஃப்ஸ்டைல்

குளிருக்கு ஏற்ற நீ்ர்

Published On 2018-12-10 03:13 GMT   |   Update On 2018-12-10 03:13 GMT
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும்.
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இல்லாவிட்டால் சளி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகக்கூடும்.

இதனை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து சீராக தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கலாம். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அது தேவையற்ற கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

சரும ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் தண்ணீர் பருகுவது அவசியமானது. தண்ணீர் அதிகம் பருகினால் சரும சுருக்கம் ஏற்படாது. சருமமும் வறண்டு போகாது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை பருகுவதே நல்லது.

மது குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி விடும். பழங்கள், காய்கறிகளில் நீர்ச்சத்து கலந்திருப்பதால் அவை உடலில் நீரிழப்பை கட்டுப்படுத்த துணைபுரியும்.

குளிர்காலத்தில் சூடான டீ, காபி பருகுவது இதமாக இருக்கும். உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும். ஆனாலும் அதில் கலந்திருக்கும் ‘காபின்’ உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்து விடும். அவற்றுக்கு பதிலாக சாலட், சூப் வகைகளை பருகலாம். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதோடு உடலில் நீரின் அளவையும், வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவும்.
Tags:    

Similar News