பெண்கள் உலகம்

கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது

Published On 2018-10-08 08:28 IST   |   Update On 2018-10-08 08:28:00 IST
மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.

‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
Tags:    

Similar News