உடற்பயிற்சி

வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் வழிகள்

Published On 2023-10-08 09:03 GMT   |   Update On 2023-10-08 09:03 GMT
  • மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கம்.
  • புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல.

வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கமாக இடம்பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல. உள் மனம் நிம்மதியை அனுபவிப்பது வெளிப்பட வேண்டும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...

* நன்றி உணர்வுடன் இருங்கள். ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதீர்கள். அதுபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். மற்றவர் உதவி நாடி வந்தால் அவர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவி செய்ய முன் வாருங்கள்.

* நன்றி உணர்வை கடைப்பிடிப்பது மனதை பூரிப்படைய செய்யும். பிறருக்கு செய்த உதவி பயனுள்ளதாக அமைவதை கண்கூடாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

* அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை தொடருங்கள். ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுவது மன திருப்தியை அளிக்கும்.

* எதிர்மறை சிந்தனைகள் மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனதை திசை திருப்பும் செயல்களில் இருந்தும் விலகி இருங்கள். நேர்மறையான மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். மனம் நிம்மதி அடைந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

* கடந்த கால நிகழ்வுகளையோ, நடந்து முடிந்த சம்பவங்களையோ திரும்பத்திரும்ப நினைவுக்கு கொண்டு வராதீர்கள். அது இறுக்கமான மனநிலைக்கு இட்டுச்செல்லும். நிம்மதியை தொலைத்து மகிழ்ச்சியை சீர்குலைத்துவிடும்.

* மன அழுத்தத்தைக் குறைக்கவும், நினைவாற்றல் திறனை மேம்படுத்தவும் தியானத்தில் ஈடுபடுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும்.

* குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவை வலுப்படுத்துங்கள். அவர்களுடனான பிணைப்பு உணர்வுப்பூர்வமானதாக அமையும் பட்சத்தில் மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்க துணைபுரியும்.

* குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். பயணங்கள் மனதை இலகுவாக்கும். சுற்றுலா இடங்கள் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொடுக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்க வழிவகை செய்யும்.

* சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம் என உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

* தெளிவான, அடையக்கூடிய, அர்த்தமுள்ள இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான இலக்குகளை பின்தொடர்வது வாழ்க்கையின் நோக்கத்தை பிரதி பலிக்க செய்யும். உள் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க உதவும்.

Tags:    

Similar News