குழந்தை பராமரிப்பு

குழந்தைகளிடையே பொதுவாக காணப்படும் ஒவ்வாமை வகைகள்

Published On 2023-01-16 11:10 IST   |   Update On 2023-01-16 11:10:00 IST
  • மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும்.
  • சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.

குழந்தைகளிடையே பொதுவாக காணப்படும் ஒவ்வாமைகள் பற்றி இங்கு காண்போம்

* சிரங்கு ( எக்ஸிமா - Rash) - இது எரிச்சலூட்டும் துணி வகைகள், சோப்புகள், உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய, பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்ககூடிய ஒவ்வாமையாகும்.இதனால் தோலில் சிவப்பு நிற மிகச்சிறிய புடைப்புகள் அல்லது வறண்ட சருமமாகவோ / செதில் செதிலாகவோ காணப்படும்.

* பேப்புலர் அர்டிகாரியா(Arteria) - அரிக்கக்கூடிய தடுப்புகள் உண்டாக்கும் இவ்வகையான ஒவ்வாமையானது பூச்சிகள், கொசுகள், மூட்டை பூச்சிகள் கடிப்பதனால் ஏற்படக்கூடியது. சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.

* படை நோய் (Hives) - உடலானது குறிப்பிட்ட ஓர் பொருளுக்கு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, நமது உடலில் 'ஹிஸ்டமைன்' எனப்படும் வேதிப்பொருள் உருவாகும். இதன் விளைவாக உடலில் இளஞ்சிவப்பு / சிவப்பு நிற திட்டுகள் தடித்த சிவப்பு இரத்த வளையத்தோடு காணப்படும்.

* உணவு ஒவ்வாமை(Food Allergies) - குழந்தை உண்ணும் உணவினால் மட்டுமின்றி , குழந்தை உண்ணாது தாய்ப்பால் வழங்கும் தாய் உண்ணும் உணவாலும் ஒவ்வாமை ஏற்படலாம். வாந்தி, வயிற்று போக்கு, மலத்தில் இரத்தம், இருமல், அரிப்பு, திட்டுகள் போன்றன உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும்.

ஒவ்வாமைக்கான மருத்துவம்

மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும். அரிப்புடன் அசௌகரியத்தைத் தரக்கூடிய ஒவ்வாமைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட வேண்டும். பொதுவாக பின்வருவன பின்பற்றப்படலாம்.

* ஒவ்வாமை காரணிகளைத் தவிர்த்தல் (Avoiding Allergic Reactions) - குழந்தையின் தோலிற்கு எரிச்சல் தரக்கூடிய சோப்புகள், சோப் பவுடர்கள், வாசனை திரவ களிம்புகளை தவிர்க்க வேண்டும்.

* வாசனை அற்ற சுத்தப்படுத்திகளை பயன்படுத்துதல் (Use Odorless Cleanser) - மென்மையான வாசனை அற்ற சோப்பு கொண்டு கடுமையாக தேய்க்காமல் மென்மையாக குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் மற்றும் அதன் பின் நன்கு உடலை துடைக்க வேண்டும்.

* ஒரு சதவீத ஹைட்டிரோகாட்டிஸோன் பயன்படுத்துதல் (Use Hydrocortisone Cream) - பொதுவாக குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்தப்பிறகு எக்ஸிமா மற்றும் பிற ஒவ்வாமையினால் ஏற்படும் தோல்தடுப்புகளுக்கு ஹைட்டிரோகாட்டிஸோனைப் பயன்படுத்தலாம்.

* அரிப்பதை தவிர்க்கும் கை உறைகளைப் பயன்படுத்துதல் (Use Corrosion Resistant & Hand Coverings) - குழந்தைகள், மென்மையான குணமாகக் கூடிய தடிப்புகளை கூட அரிப்பினால் தங்கள் விரல் நகங்களால் சொரிந்து காயம் ஏற்படுவதை தடுக்க கை உறைகளை அணிந்து விடலாம்.

ஒவ்வாமை தடுப்பு முறைகள்

உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுக்க சில வழிகள்...

* ஒவ்வாமை குறைவான துவைக்கும் பவுடரால், குழந்தையின் துணிகளைத் துவைத்தல்

* வாசனை அற்ற சோப், ஷாம்பு மற்றும் திரவ களிம்புகளைப் பயன்படுத்துதல்

* தூசி மற்றும் பூச்சிகளைத் தவிர்க்க, குழந்தையின் படுக்கை மற்றும் படுக்கை துணிகளை சுடு தண்ணீரில் ஒவ்வொரு வாரமும் துவைக்க வேண்டும்

* வீட்டினை சுத்தமாக வைத்து கொள்ளல்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

ஒவ்வாமைக்கு வீட்டிலே மருந்துகள் / கை வைத்தியம் செய்து கொள்ளலாம் என்றாலும் பின்வரும் சமயங்களில் மருத்துவரை அணுக வேண்டும்.

* தடுப்புகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும் போதும், மோசமடையும் போதும்

* தோலில் தொற்றுகள், கொப்புளங்கள் காணப்படுதல், இரத்தம் வடிதல், நீர் ஒழுகுதல் போன்றவற்றின் போதும்

* தடுப்புகளுடன் காய்ச்சல், அதிகப்படியான அழுகை, குறைவான உண்ணல், சோம்பல், இருமல் போன்றவையும் உள்ள போதும்

* மூச்சு திணறல், சுவாசிக்க கஷ்டப்படுதல், உதடு / நாக்கில் வீக்கம் போன்றவை தீவிரமான நிலையை குறிக்கக்கூடியவை. இவ்வேளைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த ஆலோசனை எங்கள் நிபுணர்களிடமிருந்து பெற்றிருந்தாலும். நீங்கள் கண்டறிந்த எந்தவொரு தீவிர அறிகுறிகளும் இருந்தால், முதலில் மருத்துவரை அணுகவும்.

Tags:    

Similar News