குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் கிட்டப்பார்வை: பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

Published On 2023-03-19 07:00 GMT   |   Update On 2023-03-19 07:00 GMT
  • ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.

உங்கள் குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் அமர்ந்து பார்க்கிறது என்றால் அதற்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.

குழந்தைகள், கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தாலோ, கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தாலோ, அடிக்கடி கண் கட்டி வந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கண் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அடிக்கடி குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்பட்டாலும், பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்று உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகள் வெயிலில் கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தால், அவர்களின் விழித்திரையில் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை விலகல் மற்றும் கிளாக்கோமா வரவும் சாத்தியமுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இதன் பாதிப்பைத் தடுக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதால், பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.

Similar News