குழந்தை பராமரிப்பு

பெட் வெட்டிங் என்பது குழந்தைகளுக்கு நோயா?

Published On 2022-07-12 04:10 GMT   |   Update On 2022-07-12 04:10 GMT
  • தூக்கத்தில் பயந்து, உணர்ச்சிவயப்பட்டாலோ படுக்கையிலே சிறுநீர் கழிப்பதாக சொல்லப்படுகிறது.
  • வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.

படுக்கையை நனைத்தல் என்பது 'பெட் வெட்டிங்' எனச் சொல்கின்றனர். இதை 'நேச்சுரல் யூரினேட்டிங் சில்ரன்' என்று டெக்னிக்கலாக சொல்கின்றனர். இதன் அர்த்தம் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் என்று சொல்வது உண்டு. குழந்தைகள் பொதுவாகவே படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் இருப்பர். வளர வளர இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். படுக்கையை நனைக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களா, இது அவர்களின் பழக்கமா, குறைபாடா, உடல் பிரச்சனையா எனப் பல பெற்றோரும் பயப்படுகின்றனர்.

தூக்கத்தில் பயந்து, உணர்ச்சிவயப்பட்டாலோ படுக்கையிலே சிறுநீர் கழிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு முக்கிய காரணம்தான். ஆனால், இது மட்டுமே காரணமா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடே படுக்கையை நனைப்பதற்கு முக்கிய காரணமாகும்.

பெண் குழந்தைகள் 6 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆண் குழந்தைகள் 7 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். அதாவது இந்த பெட் வெட்டிங் பிரச்னையிலிருந்து மீண்டு வருகின்றனர்.

பெட் வெட்டிங்குக்கும் உடல்நல பிரச்னைக்கும் தொடர்பு உண்டு…

* வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.

* மனநல வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்.

* மாற்று திறனாளி குழந்தைகள்

* நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ள குழந்தைகள்

* வலிப்பு பிரச்சனை உள்ள குழந்தைகள்

* கெஃபைன் ன் உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள் அல்லது பெற்றோர் கெஃபைன் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்.

Tags:    

Similar News