குடற்புழுக்கள் குழந்தைகளின் உடலுக்குள் எப்படிச் செல்கின்றன?
- குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
- வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும்.
மனிதக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் குடற்புழுக்களும் அவற்றின் முட்டைகளும் மண்ணில் கலந்திருக்கும். குழந்தைகள் அதுபோன்ற இடங்களில் விளையாடும்போது, அவற்றை எதிர்பாராதவிதமாகத் தொட்டுவிட்டு, கைகழுவாமல் உணவு உண்ணும்போது, விரலை வாயில் வைக்கும்போது அவை உடலுக்குள் செல்லும். கொக்கிப்புழுவின் லார்வாக்கள் சருமத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் செல்லக்கூடியவை என்பதால், குறிப்பிட்ட இடங்களில் குழந்தைகள் காலணி அணியாமல் நடக்கும்போது பாதங்கள் வழி உள்செல்கின்றன.
படைபோன்ற பிரச்னை ஏதுமின்றி ஒருவருக்குப் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டால், கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரைக் கொதிக்கவைக்காமல் அருந்துவது, காய்கறிகள், பழங்களைக் கழுவாமல் உண்பது, முழுமையாக வேகவைக்காத இறைச்சி மற்றும் உணவுகளைச் சாப்பிடுவது என இவையெல்லாம் புழுக்கள் உடலினுள் செல்ல வாய்ப்பளிக்கும். சுகாதாரமற்ற வீடு, அறை, படுக்கை, உள்ளாடைகள் இவையெல்லாம் குடற்புழுத்தொற்று பெருகக் காரணங்களாகும்.
குடற்புழுப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா?
எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் தவிர்க்கலாம். அவை...
* கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.
* ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.
* குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
* பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.
* வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும்.
* மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.
* விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.