குழந்தை பராமரிப்பு

பெண்குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையின் பங்கு

Published On 2024-01-02 06:48 GMT   |   Update On 2024-01-02 06:48 GMT
  • பெண் குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது.
  • குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

பெண் குழந்தையின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தையுடன் அதிக பாசப்பிணைப்போடு வளரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிய தெளிவும், புரிதலும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ப்பில் பெரும்பாலும் தாயே அதிக பங்கு வகிக்கிறார். குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ற பொறுப்பு வகிக்கும் தந்தையின் பிம்பம் கண்டிப்பானவர் என்றே குழந்தைகளுக்கு உருவகப் படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையையும் ஈடுபடுத்தும் வழிகளை இங்கு பார்ப்போம்.

நேரடித் தொடர்பு:

குழந்தை பிறந்தது முதலே அதன் வளர்ப்பிலும். பராமரிப்பிலும் தந்தையின் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். டயப்பர் மாற்றுவது. குழந்தையுடன் விளையாடுவது. குழந்தைவைத் தூங்க வைப்பது ஆகிய செயல்பாடுகளில் தந்தையையும் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் மகளுக்கும், தந்தைக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்த முடியும் குழந்தை வளரும் பருவத்தில், அதன் சிறு சிறு தேலை களை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்தையி வசமே ஒப்படைப்பது அவசியமாகும்.

நேரம் செல்விடுவது:

வளரும் பருவத்தில் மகளுக்கு தந்தையின் அரவணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். தந்தை, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லது, வீட்டுப்பாடங்களை சொல்லிக் கொடுப்பது, இருவரும் இணைந்து தங்களுக்குப் பிடித்த உணவை சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகும். அதன்மூலம் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

பொறுப்பை ஏற்க வைப்பது:

பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. அதை தவிர்த்து குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். குழத்தை வளர்ப்பு தொடர்பான முடிவை எடுப்பதில் தந்தையையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை, அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை தரலாம். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை தந்தையிடமே முழுமையாக ஒப்படைக்கலாம். இதன்மூலம் மகளின் நலன் மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களையும் தந்தை கவனித்து செய்ய முடியும்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். தனிப்பட்ட பல விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதில் தந்தை மகளுக்கு இடையே தயக்கம் இருக்கும். ஆனால் மகளின் உணர்வு சார்ந்த விஷயங்களில் கட்டாயம் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்கள் வளரும்போது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள் அந்த நேரத்தில் தந்தையின் வழிகாட்டல் இருந்தால், மகள் சமூக ரீதியான மாற்றங்களை எளிதாக அணுக முடியும்.

Tags:    

Similar News