கிரிக்கெட் (Cricket)

பயங்கர Form-ல இருக்காரு.. ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு.. பேட் கம்மின்ஸ்

Published On 2023-11-18 13:00 IST   |   Update On 2023-11-18 13:00:00 IST
  • இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் அச்சுறுத்தலாக இருப்பார்.
  • இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களை எங்களது பேட்டர்களும் தக்க போட்டியை வழங்கலாம்."

"அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஐந்து பேர் உள்ளனர். அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா எங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்"

"பிட்ச்-ஐ பொருத்தவரை அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியே இருக்கும். சொந்த நாட்டில், உங்களின் விக்கெட்டில் விளையாடுவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இங்கு அதிக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News