கிரிக்கெட்

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம்- அஸ்வின்

Published On 2022-12-05 07:20 GMT   |   Update On 2022-12-05 07:20 GMT
  • தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுப்மன் கில், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வேறு இருக்கிறார்.
  • மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்படி ரன்கள் மேல் ரன்கள் சாதனை மேல் சாதனைகள் படைத்து கேப்டனாக தனது அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்ல முடியாத அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அதே சமயம் இந்த தொடர்ச்சியான ஆட்டத்தால் டோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று விரும்பும் சென்னை ரசிகர்கள் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்.

Tags:    

Similar News