கிரிக்கெட் (Cricket)
null

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்: டிராவிட்-சேவாக்கை முந்த கோலிக்கு வாய்ப்பு

Published On 2023-12-26 12:25 IST   |   Update On 2023-12-26 12:27:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார்.
  • இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

செஞ்சூரியன்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுசூரியன் நகரில் இன்று மதியம் தொடங்குகிறது. 2 ஆட்டம் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட்கோலி, புதிய மைக்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார். இதில் முதலிடத்தில் டெண்டுல்கர் 1741 ரன்களுடன் (25 போட்டி) உள்ளார்.

2-வது இடத்தில் சேவாக் (1306 ரன், 15 டெஸ்ட்) 3-வது இடத்தில் ராகுல் டிராவிட் (1252 ரன், 21 டெஸ்ட்) உள்ளார். இதில் டிராவிட், சேவாக்கை முந்த கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2-வது இடத்தில் உள்ள சேவாக்கை முந்த கோலிக்கு 71 ரன்கள் தேவை. டிராவிட்டை முந்த 17 ரன்கள் தேவை. அவர் இந்த ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிகாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்து இந்திய வீரர்களில் 2-வது இடத்தை பிடிக்கிறார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 78 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 88 இன்னிங்ஸ்களில் 77 சிக்சர்களை அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 சிக்சர்களை அடித்தால் டோனியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடிப்பார். சேவாக் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்களை விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இன்று செஞ்சூரியன் நகரில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News