கிரிக்கெட் (Cricket)

கேஎல் ராகுல் - பவுமா

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்- இந்திய அணி இன்று டெல்லி வருகிறது

Published On 2022-06-05 10:57 IST   |   Update On 2022-06-05 10:57:00 IST
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
  • இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 9-ந்தேதி டெலியில் நடக்கிறது.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2-ந்தேதி டெல்லி வந்தடைந்தது. தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் இன்று டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் முடிவில் வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள். இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தினேஷ் கார்த்திக், சாகல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஹர்சல் பட்டேல் ரவி பிஷ்னோய், அவெஷ்கான், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக்.

Tags:    

Similar News