கிரிக்கெட்

பாண்ட்யா- சாவ்லா அசத்தல் பந்து வீச்சு: ஐதராபாத்தை 173 ரன்னில் கட்டுப்படுத்தியது மும்பை

Published On 2024-05-06 15:56 GMT   |   Update On 2024-05-06 15:56 GMT
  • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
  • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வான்கடே:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News