கிரிக்கெட்

பிரித்வி ஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்- ஹர்த்திக் பாண்ட்யா

Published On 2023-01-27 06:38 GMT   |   Update On 2023-01-27 06:38 GMT
  • நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
  • சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

ராஞ்சி:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றியது.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இது தொடர்பாக கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார். பிரித்விஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு (முகமது ஷமி, முகமது சிராஜ்) ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை.

புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்போதும் ரசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக நான் வலைகளில் பந்து வீசும் போதெல்லாம் புதிய பந்தை தேர்வு செய்கிறேன்.

கடந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால் தொடக்கத்தில் நான் பந்து வீச தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்போதும் அழுத்தமாக இருந்ததில்லை. பயிற்சியில் ஈடுபட்ட நாங்கள் டோனியை சந்தித்தோம். அவரை சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது.

நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.

இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

Tags:    

Similar News