கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: 17 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

Published On 2026-02-18 22:40 IST   |   Update On 2026-02-18 22:40:00 IST
  • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
  • ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார்.

அகமதாபாத்:

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபெ அதிரடியாக

ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.

நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News