கிரிக்கெட் (Cricket)

துபே அதிரடி அரைசதம்... நெதர்லாந்து அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Published On 2026-02-18 20:55 IST   |   Update On 2026-02-18 20:55:00 IST
  • ஷிவம் துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 3-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து திலக் மற்றும் சூர்யகுமார் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். திலக் 27 பந்தில் 31 ரன்னிலும் சூர்யகுமார் 28 பந்தில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதனை தொடர்ந்து ஷிவம் துபே - பாண்ட்யா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். துபே முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியாக வந்த ரிங்கு சிங் தனது பங்குக்கு ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News