கிரிக்கெட் (Cricket)

முதல் இந்திய வீரர்- டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பாண்ட்யா

Published On 2026-02-19 10:54 IST   |   Update On 2026-02-19 10:54:00 IST
  • நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசினார்.
  • உலகின் 6-வது ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 6000+ ரன்கள், 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்தார்.

இந்தச் சாதனையைச் செய்த உலகின் 6-வது ஆல்-ரவுண்டர் இவராவார். இவருக்கு முன்னதாக கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த இரட்டை மைல்கல்லை எட்டியுள்ளனர்.

டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தாலும், 6000 ரன்கள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News