கிரிக்கெட் (Cricket)
null

வெற்றி பெறும் அளவுக்கு விளையாடவில்லை- தோல்வி குறித்து ரோகித் கருத்து

Published On 2023-12-29 11:16 IST   |   Update On 2023-12-29 12:34:00 IST
  • 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
  • விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

முதலாவது டெஸ்ட் தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் 31 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற இந்திய அணியின் சோகம் தொடருகிறது. கடைசி டெஸ்டில் இந்தியா ஜெயித்தாலும் தொடரை சமன் செய்ய முடியுமே தவிர வெல்ல முடியாது.

செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வியை தழுவிய பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். ஆனால் பந்துவீச்சுக்கு உகந்த சூழலை கச்சிதமாக பயன்படுத்த தவறி விட்டோம். 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதில் விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது. ஆனால் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு அணியாக கூட்டு முயற்சி தேவை. அதை செய்யவில்லை.

வெவ்வேறு நேரங்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர். இங்குள்ள சூழலுக்கு தக்கபடி எங்களை மாற்றிக்கொள்வது  மெச்சும்படி இல்லை. தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த டெஸ்டுக்கு தயாராக வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News