கிரிக்கெட்

இவர்களே வெற்றிக்கு காரணம்: பந்துவீச்சாளர்களைப் புகழ்ந்த ரோகித் சர்மா

Published On 2024-01-04 15:01 GMT   |   Update On 2024-01-04 15:01 GMT
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
  • இந்த வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணம் என்றார் ரோகித் சர்மா.

கேப் டவுன்:

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

இந்த வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சார்களான சிராஜ், பும்ரா, முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சே காரணம்.

செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் செய்த தவறை நாங்கள் புரிந்துகொண்டு அதிலிருந்து சில பாடங்களைக் கற்று தற்போது மிகச் சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக, எங்களது அணியின் பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர்.

சிராஜ் இந்தப் போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் இதேபோன்று எப்பொழுதுமே ஒரு மிகச்சிறப்பான ஸ்பெல்லை அணிக்காக வழங்கி வருகிறார்.

நாங்கள் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. ஆனாலும் கடைசி 6 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இதுபோன்ற குறுகிய போட்டிகளில் இப்படித்தான் நடக்கும். இருந்தாலும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆசிய கண்டத்திற்கு வெளியே நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் நமது அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

இந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்த தொடரை நம்மால் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் சமனில் முடித்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா ஒரு பலமான அணி எப்போதுமே நமக்கு அவர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியது என தெரிவித்தார்.

Tags:    

Similar News