கிரிக்கெட்

ரக்கீம் கார்ன்வெல்

டி20 கிரிக்கெட்டில் ருத்ர தாண்டவமாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் - இரட்டை சதமடித்து அசத்தல்

Update: 2022-10-06 19:32 GMT
  • அமெரிக்காவின் உள்ளூர் டி20 தொடர் அட்லாண்டா ஓபன் ஆகும்.
  • இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஹீம் கார்ன்வெல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதலில் ஆடிய அட்லாண்டா ஃபயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரக்கீம் கார்ன்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 77 பந்துகளில் 22 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் உள்பட 205 ரன்கள் குவித்து ஆட்டமிழ்க்காமல் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 266.77. அடுத்து ஆடிய ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ரக்கீம் கார்ன்வெல் இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் பெங்களூரு அணியின் கிறிஸ் கெயில். இவர் 2013-ல் புனே வாரியர்சுக்கு எதிராக 175 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத போட்டியில் கார்ன்வெல் இந்த ரன்களை எடுத்ததால் இது சாதனைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

Tags:    

Similar News