கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் கோலி, கெய்ல் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

Published On 2024-02-21 15:23 GMT   |   Update On 2024-02-21 15:23 GMT
  • முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.

Tags:    

Similar News