கிரிக்கெட்

லிட்டன் தாஸ்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

Update: 2022-12-02 22:49 GMT
  • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
  • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்கா:

இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News