கிரிக்கெட்

ஆரஞ்சு ஆர்மியின் சிறப்பான ஆட்டம் இன்னைக்கு பார்ப்பீங்க.. பேட் கம்மின்ஸ்

Published On 2024-05-26 10:17 GMT   |   Update On 2024-05-26 10:17 GMT
  • ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
  • நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டியை ஒட்டி கொல்கத்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோ ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

வீடியோவில் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், "அன்பார்ந்த பேட், இன்று. உனக்காக சிறு தகவலை தெரிவிப்பது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில், இந்த சீசனில் ஆரஞ்சு ஆர்மியை நீங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளீர்கள் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இந்த சீசனில் நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்."

"ஒரே எதிரணியை வேறொரு களத்தில் நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், இன்று நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நிறங்கள் உங்களுக்கு மிகவும் பரீட்சயமான பர்பில் மற்றும் கோல்டு ஆகும். பரபரப்பான இறுதிப்போட்டியில், சிறப்பான அணி வெல்லட்டும், இதன் மூலம் நான் நமது அணியை குறிப்பிடுகிறேன்," என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "சிறிய தகவலுக்கு நன்றி. நீங்கள் அருமையாக இருந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் swag-க்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். ஆனால், இந்த மைதானத்தில் எங்களின் சிறப்பான வெற்றியை பெற போகிறோம். கே.கே.ஆர். வீரர்களுக்கு எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும்."

"ஞாயிற்றுக் கிழமை வாருங்கள், இந்த சீசனில் நீங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியதாக தெரிவித்தீர்கள், ஆனால் ஆரஞ்சு ஆர்மி தனது சிறப்பான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த சேமித்து வைத்திருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News