கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் தொடர்: 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி படைத்த சாதனை

Published On 2023-05-02 14:21 IST   |   Update On 2023-05-02 14:21:00 IST
  • பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது.
  • பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 43-வது லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 16 ஆண்டுகள் கழித்து மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது. இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூரு அணி குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டிய ஒரு சாதனையை சமன்செய்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு அணியானது கடந்த 2008-ம் ஆண்டு சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 127 ரன்களை மட்டுமே இலக்காக வைத்து சென்னை அணியை வீழ்த்தியது.

அதேபோன்று தற்போது 16 ஆண்டுகள் கழித்து லக்னோ அணிக்கு எதிராக அவர்களது மைதானத்திலேயே 127 ரன்களை மட்டும் இலக்காக வைத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது வீழ்த்தியுள்ளது. 

Tags:    

Similar News