கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024 - ஜாஸ் பட்லர் மிரட்டல்.. 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

Published On 2024-04-16 18:10 GMT   |   Update On 2024-04-16 18:10 GMT
  • ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
  • ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் தன் பங்கிற்கு 34 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து வந்த துருவ் ஜூரெல், அஸ்வின் மற்றும் ஹெட்மையர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்கத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். இவருடன் போவெல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News